/ கதைகள் / தன்னறம்
தன்னறம்
சமூகம், குடும்பம் சார்ந்த பரிமாணத்தில் ஏற்படும் விளைவுகளை சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பிரிவு துவங்கி, 11 கதைகள் உள்ளன. கணவரின் வேலை சூழல் அறிந்து மனைவி நடந்து கொள்வதை, ‘அன்பின் வழியது’ கதை உணர்த்துகிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் ஆண் குழந்தை, நீதிமன்ற உத்தரவால் தாய், தந்தை என யாரிடம் இருக்க விரும்பியதை, ‘மகன் வருவானா’ கதை சொல்கிறது. போலி கவுரவத்தை, ‘தன்னறம்’ கதை தோலுரித்து காட்டுகிறது. கிராம கூட்டு வாழ்க்கையை உதறி, நகரத்துக்கு இடம் பெயரும் போது, மனிதன் தனிமையாகவும், சுயநலவாதியாகவும் ஆவதை கூறுகிறது. புற்றுநோயின் தாக்கம் குடும்பத்தை எந்த வகையில் நிலைகுலைய வைக்கும் என, ‘தையல் சொல்’ கதை வலியுடன் சொல்கிறது. – டி.எஸ்.ராயன்