/ வரலாறு / ஆதித்த கரிகாலன் மறைக்கப்பட்ட வரலாற்று படுகொலை
ஆதித்த கரிகாலன் மறைக்கப்பட்ட வரலாற்று படுகொலை
சோழ மன்னன் ஆதித்த கரிகாலன் படுகொலை மர்மங்கள் குறித்த வரலாற்று குறிப்புகளை ஊகங்களோடு பிணைத்து கூறும் நாவல் நுால். பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்த ஆதித்த கரிகாலன் வரலாற்று நிகழ்வுகளை எடுத்து கூறுகிறது. வீரபாண்டியன் கொலைக்கு பின்பான எதிர்விளைவே ஆதித்த கரிகாலன் கொலை என எண்ண வைக்கிறது. ஆதித்தன் கொலையை பல்வேறு ஊகங்களோடு மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறது. அக்கால சூழல் அடிப்படையில் கொலை மீதான நடவடிக்கைகள் பற்றி அலசுகிறது. கல்வெட்டு, செப்பேடு சான்றுகளை சுட்டிக்காட்டி செய்திகளை தருகிறது. வரலாறு மீளாய்வுக்குரியது என உணர்வை ஏற்படுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




