/ வாழ்க்கை வரலாறு / ஒரு பேராசிரியரின் அர்த்தமுள்ள வாழ்க்கை
ஒரு பேராசிரியரின் அர்த்தமுள்ள வாழ்க்கை
பேராசிரியராக பணியாற்றியவரின் சுயசரிதை நுால். கிராமத்தில் பிறந்தது முதல் வாழ்க்கை பயணத்தை சொல்லி, ஊரில் முதல் பட்டதாரியாக புகழ்பெற்றதை குறிப்பிடுகிறது. சிறு வயதிற்கு உரித்தான குறும்புத்தனங்களை ஒளிவு மறைவின்றி விவரிக்கிறது. மாணவர் போராட்டத்தை அறவழியில் முடிவுக்கு கொண்டு வந்தது குறித்து சொல்கிறது. உறவினரே, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டதும், அதிலிருந்து மீண்டதும் மெய்சிலிர்க்க வைக்கிறது. கல்லுாரி பணியையும், விவசாயத்தையும் இரு கண்களாக கருதி செயல் பட்டதை விவரிக்கிறது. ஒரு மனிதருடன் பயணித்த அனுபவத்தை தருவதோடு, அயர்ச்சியை ஏற்படுத்தாதது கவனத்தை ஈர்க்கும் நுால். – ஊஞ்சல் பிரபு