/ ஆன்மிகம் / தீக்குள் விரலை வைத்தால்...

₹ 380

திருவாசகத்தால் தொடுக்கப்பட்டுள்ள நுால். அன்பின் ஒளியை உள்வாங்கி, உறவுகளில் பிரதிபலிக்கும் நுட்பத்தை சுட்டிக்காட்டுகிறது.எந்த காலத்திற்கும், எந்த நோய்க்கும்‌ திருவாசகம் மருந்தாக அமையும் என்பது அடிநாதம்.‌ ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து வர வேண்டிய நிலைகளை முன் வைக்கும் பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளது‌‌. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத இறைவன் இருப்பதால், இன்னல்களை எதிர்கொள்ளும் சக்தி பிறக்கும் என நம்பிக்கை தருகிறது. கோபம், பொறாமை, பயத்தால் கல்லாக மாறிய மனதையும் கனியாக மாற்றி அருள் புரியும் விதத்தை விளக்கி உருகச் செய்கிறது. இறைவனின் அடியவர்கள் தன்னை தாழ்த்திய கருத்துகளை அறிய தரும் நுால்.– தி.க‌.நேத்ரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை