/ இலக்கியம் / தெய்வப்புலவர் திருவாய்மொழி
தெய்வப்புலவர் திருவாய்மொழி
குறள்களுக்கு விளக்கமாக உரை கூறும் நுால். திருக்குறள் பாக்களின் உள்ளடக்கத்தை கருத்தியல் ரீதியாக அறிமுகம் செய்கிறது. அறிமுக இயல், பாயிர இயல், இல்லற இயல் என 14 தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் உள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் கருத்து பயின்று வருவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு இயலிலும் செய்திகள் தனித்துவமுடன் தொகுக்கப்பட்டுள்ளன. முக்கிய சொற்கள் குறித்த விபரமும் தரப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு விரிவான விளக்கங்கள் தந்து அறிமுகம் செய்யும் நுால். – சிவா




