/ கவிதைகள் / தென்றல் காற்றே
தென்றல் காற்றே
உணர்வு கலந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். நிலவாக ஒளிர்ந்து உறங்காத இரவுகளில் தாய் உதவியாக இருப்பார் என்கிறது. கல்வியில் ஏற்ற தாழ்வு, சிந்தனை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளை கூறுகிறது. வீழ்ச்சி, துரோகம், அவமானம் கடந்து வீறுநடை போட தன்னம்பிக்கை ஊட்டுகிறது. குடும்பமாக வாழ்வதால் ஏற்படும் சிறப்பு நீடிக்க, அன்பே பிரதானம் என கூறுகிறது. புதிய சிந்தனையை வளர்ப்பதன் அவசியத்தை கூறுகிறது. உழவர்குரலாக பேசுகிறது. ஜன்னல் பார்வையில் பெண்ணின் மனதை காற்று மொழியாக படர விடுகிறது. முதுமையை பார்வையாளனாக கவனிக்க வைக்கிறது. செவிகள் இருந்தும் இல்லாததை போல் வாழ்வதை சொல்கிறது. ஒவ்வொரு படைப்பிலும் எதார்த்தமுள்ள நுால். – டி.எஸ்.ராயன்