/ கதைகள் / தேனே! தேன்மல்லிப் பூவே

₹ 280

எளிய நடையில் படைக்கப்பட்ட ஜனரஞ்சக நாவல் நுால். காதல் ஏற்படுத்தும் அவஸ்தை, கிளர்ச்சியை பாசாங்கின்றி சொல்கிறது. மனித மனதில் காதல் நுழையும் தருணம், அதனால் உண்டாகும் மாற்றங்கள் கூறப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் மனப் போராட்டம் வலிந்து திணிக்காமல் தெள்ளிய நீரோட்டமாக நிகழ்வுகளுடன் நகர்கிறது. மனித உறவில் சிக்கல்களையும், அது மாற்றம் அடைவதையும், சமூக கட்டமைப்புகளுக்குள் அன்றாட ஆசைகள் அசைய துவங்குவதையும் நுட்பமாக சித்தரித்து பதிவு செய்கிறது. தேனி நகரம் மாற்றம் கண்டு வருவதையும், குடும்ப கட்டமைப்பின் உறுதியையும் பறைசாற்றுகிறது. உறவுகளின் மனோநிலையும், காதலால் உண்டாகும் சிக்கலையும் தெளிவாக படம் பிடிக்கிறது. மனத் தவிப்பை பேசும் நாவல். – ஊஞ்சல் பிரபு


சமீபத்திய செய்தி