/ கட்டுரைகள் / தென்னிந்தியத் திருமணச் சடங்குகள்

₹ 160

இந்தியாவின் தெற்குப் பகுதியில் நிலவிய சடங்குகள் பற்றி விவரிக்கும் நுால். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வு நடைமுறையையும் விவரிக்கிறது.திருமண முறையில் நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் என தகவல்களை தருகிறது. சமுதாயத்தில் நிலவிய நடைமுறை, பெண்களின் நிலை, குறிப்பிட்ட ஜாதிகளின் நன்மைக்கு உருவாக்கப்பட்ட சடங்குகள், முன்னோர் வழிபாடு, உறவினர் ஆதிக்கம் குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளது.பன்மைத்துவமான பண்பாட்டு வேர்களைக் காட்டி வியப்பில் ஆழ்த்துகிறது. பழங்குடியின மக்களின் தொன்மை சமூக கட்டமைப்பை அறிந்து, புரிந்து வாழ உதவும் நுால்.– ஒளி


புதிய வீடியோ