/ புத்தக மதிப்புரை / தேன்சிட்டு தீபாவளி மலர்

₹ 400

அறிவூட்டும் கதை, கட்டுரைகளுடன் இரண்டு புத்தகங்களாக மலர்ந்துள்ளது தேன்சிட்டு தீபாவளி மலர். தமாசு துணுக்குகளும் நிறைந்துள்ளன. இணைய இதழான தேன்சிட்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கு அச்சு இதழாக வந்துள்ளது. இதில், ஏராளமான சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நெஞ்சை அள்ளும் கவிதைகள் மகிழ்ச்சி தருகின்றன. சுவாரசியம் தரும் ஒரு பக்க கதைகள் பலவும் இடம் பெற்றுள்ளன. இதழில் பக்கத்துக்கு பக்கம் மென்மையான நகைச் சுவை தரும் தமாசுகள் மற்றும் படங்களுடன் குதுாகலம் ஊட்டுகின்றன. சிங்கப்பூர் பற்றிய சிறப்பு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. பல்வேறு இன மக்கள் வசிக்கும் அந்த நாட்டில் வளர்ச்சி எப்படி சாத்தியமாகியுள்ளது என்பதை விவரிக்கிறது. கலகலப்பூட்டும் படைப்புகளுடன் மலர்ந்துள்ளது தேன்சிட்டு. – ராம்


புதிய வீடியோ