/ ஆன்மிகம் / தெரிந்த புராணங்கள் தெரியாத ரகசியங்கள்

₹ 350

ராமாயணம், மகாபாரத கதைகளில் கடவுள், மனிதர்களுடன் பழகி வழிகாட்டியதை தெரிவிக்கும் நுால். புராண, இதிகாசங்களில் 100 கதாபாத்திரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. எமனோடு வாதாடி மீண்ட நசிகேதன், மாயப் போர் வீரன் இந்திரஜித், தானத்தில் உயர்ந்து நின்ற கர்ணன் என புதிய கோணங்களில் காட்டப்பட்டுள்ளது. அகத்தியரின் சீடர் சுதீட்சன முனிவர், ராமருடன் குருகுலத்தில் படித்த ஆனந்தன் போன்ற அறியாத பலரின் கதைகள் சுவைபட உள்ளன. கலியுகத்தில் அதர்மங்கள் அதிகமாகி, தர்மம் அழியும் என்பதை ஏழு கிணறுகள், ஊசி காதில் யானை நுழைதல், வேலியே பயிரை மேய்தல் போன்ற உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. சிறப்பானவர்களை கண் முன் நிறுத்தும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


புதிய வீடியோ