/ புத்தக மதிப்புரை / தெய்வச் சேக்கிழார்

₹ 75

பெரிய புராணம் பாடிய சேக்கிழார் குறித்த நுால். பிறப்பு முதல் முக்தி வரை விபரங்கள் அழகுற கூறப்பட்டுள்ளன. சேக்கிழாரின் குடிப்பெயர் மரபு பற்றி, கல்வெட்டு தகவல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பெயர் வரலாறும், பட்டப்பெயர் விபரங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன் அவையில் பணியாற்றியதை விவரிக்கிறது. முதல் ஏழு திருமுறைகளை ஆழ்ந்து கற்றுத் தோய்ந்ததை குறிப்பிடுகிறது. பாராட்டு, துறவறச் செயல்பாடுகள் பற்றிய விளக்கமும் உள்ளது. சேக்கிழாரின் புலமை, யாப்புத்திறன் யாவும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஒப்புமையாக சங்க இலக்கிய மேற்கோள்கள் தனித்துவமாக காட்டப்பட்டுள்ளன. தேவாரப் பதிகங்களை எடுத்தாண்டதையும் அறியத்தரும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை