/ புத்தக மதிப்புரை / தி குப்தா எம்பயர் (ஆங்கிலம்)
தி குப்தா எம்பயர் (ஆங்கிலம்)
குப்த பேரரசு பற்றிய வரலாற்றுச் செய்திகளை தொகுத்து தரும் நுால். பழங்காலத்தில் இந்திய பகுதியை ஆண்ட பேரரசுகள் பற்றிய செய்திகளை சுருக்கமாக பதிவு செய்கிறது. உலகம் அறிந்த ஜான் ஆலன், ஜான் பிரின்செப், எஸ்.ஆர்.கோயல், வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் தந்த குறிப்பு அடிப்படையில் கருத்துக்களை எடுத்து கூறுகிறது. குப்த பேரரசின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறது. முதலாம் சந்திரகுப்தர் கால நாணயம், கல்வெட்டு சான்றுகளை கொண்டு ஊகங்களை எழுப்புகிறது. ஸ்ரீகுப்தர் பற்றிய குறிப்புகளை தருகிறது. பேரரசுகளுக்கிடையில் சூழ்ச்சி, சதி, உட்பகைகள், படுகொலைகள், படையெடுப்புகள் போன்ற செய்திகளை தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




