/ கட்டுரைகள் / திரையெல்லாம் செண்பகப்பூ

₹ 340

தமிழ் திரை உலகில் பெண்களின் பங்கு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். விவரித்து செல்லும் பாங்கு வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. மலரும் நினைவுகளாய் மணக்கிறது. தெருவிலே பெண்கள் மல்லிகையும் கனகாம்பரமும் வாங்கினால், அன்றைக்கு சினிமாவுக்கு செல்வதாக பொருள் என்பதை சுவைபட உரைக்கிறது. உயிரை காக்கும் அளவில் படிக்காத பாட்டி என்ன தான் சொல்லி கொடுத்தார் என்பது வியப்பு மேலிடுகிறது. பெண்களின் திருமண பிரச்னைக்கு வரதட்சணை காரணமாக இருப்பதை ஆணித்தரமாக உரைக்கிறது. சாதனை எழுத்தாளர் வை.மு.கோதை நாயகி அம்மாள் பற்றிய தகவல்கள் அருமையாக தரப்பட்டுள்ளன. தமிழின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி பற்றிய செய்திகளும் உடைய நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை