/ கட்டுரைகள் / திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நுாலே

₹ 70

காஞ்சி மஹா பெரியவர் எழுதிய ஸ்ரீ முகத்தோடு துவங்கும், 15 கட்டுரைகளின் தொகுப்பு நுால். புரட்சிக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறள் ஓர் அறநுால். இது சொல்லும் அறத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். எல்லா காலங்களிலும் சமூகக் குறைபாடுகள் நிகழ்ந்துள்ளன. கருணை நிறைந்த இறைவன் அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப பலனை, பக்குவம் அறிந்து தருவான் என்று விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோவில் பற்றியும் விரிவான விளக்கம் தருகிறது இந்த நுால். திராவிட இயக்கம், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றியும் கூறிஉள்ளது. திருவள்ளுவரின் கூற்றுப்படி, ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற குறள் வழி நின்று இந்த நுாலைப் படிக்கலாம்.– பேராசிரியர் இரா.நாராயணன்


புதிய வீடியோ