/ ஆன்மிகம் / திருமண வரம் தரும் தெய்வத் திருமணம்

₹ 320

மனிதர்கள் தங்கள் இல்லத் திருமணங்களில் கூடி மகிழ்வது போல, தெய்வங்களின் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் திருக்கல்யாணங்களை நடத்தி அழகு பார்க்கின்றனர். தெய்வங்களும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருமணம் செய்து கொள்கின்றன. அந்தத் திருமணங்கள் எப்படி நடந்தன என்ற வரலாற்றை எளிய நடையில் கூறும் நுால். புத்தகத்தில் 32 தெய்வங்களின் திருக்கல்யாண வரலாறு, திருமண விருந்தின் சுவை போல தொகுக்கப்பட்டு உள்ளது. ஒரு வருடம் கணவனாகவும், மறு வருடம் மனைவியாகவும் வாழ்ந்தது பற்றிய வித்தியாசமான தகவல் இதில் உள்ளது. விநாயகரை மணந்த சித்தி புத்தி பற்றி அறியாத செய்திகள் பல உள்ளன. கிருஷ்ணருக்கு காதல் கடிதம் எழுதிய மணமகள் பற்றிய சுவாரசிய தகவல்கள் உள்ளன. எமதர்மனின் மனைவி யார் போன்ற புத்தம் புது தகவல்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அக்னிதேவன், சுக்கிரன், நாரதர், நாரதி, நந்தி தேவர், குபேரன், மூத்த தேவி, செவ்வாய், செஞ்சு லட்சுமி, இலா, சித்ரகுப்தன் உள்ளிட்ட அதிகம் அறியாத புராண பாத்திரங்களின் திருமண வரலாற்றை இந்த புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக பிரம்மச்சாரியான அனுமனுக்கும் திருமணம் நடந்துள்ளது என்ற செய்தி இதுவரை அறியாதது. திருமண இல்லங்களில் மணமக்களுக்கும், உறவுகளுக்கும், நட்புகளுக்கும், இந்த புத்தகத்தை பரிசாக தந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். – தி.செல்லப்பா


சமீபத்திய செய்தி