/ கதைகள் / திருமணங்கள் பேருந்துகளில் நிச்சயிக்கப்படுகின்றன
திருமணங்கள் பேருந்துகளில் நிச்சயிக்கப்படுகின்றன
ஆசிரியர் : எஸ்.செந்தில் வேலன்வெளியீடு : மணிமேகலை பிரசுரம்அலைபேசி : 91764 51934பக்கம் : 148விலை : -கருத்தாழம் மிக்க சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒரு தலைக்காதல், ரிக் ஷாவில் போன மானம், பாதிப்புகள், லட்சுமி சரம், மழை வாசனை, சர்க்கஸ் உட்பட, 21 கதைகள் உள்ளன. பெண் பார்க்க வந்தவர்கள் ஊருக்குப்போய் லெட்டர் போடுவதாய் சொல்வது, சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்ட் செல்வது என, சம்பவங்கள் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.சுயநலமாய் நடந்து கொள்பவனுக்கு ரிக் ஷா ஓட்டுனர் புகுத்தும் பாடத்தை, ‘ரிக் ஷாவில் போன மானம்’ கதை, மனிதாபிமானமாக கற்பிக்கிறது. தண்ணீர் பஞ்சமும் கதையாகியுள்ளது. சாதாரண சம்பவங்களை கற்பனை கலந்து, அழகான சொல்லாடலாக நகர்த்திச் செல்லும் பாங்கு சிறப்பாக இருக்கிறது.– ஊஞ்சல் பிரபு