/ ஆன்மிகம் / திருப்பாவை நாச்சியார் திருமொழி
திருப்பாவை நாச்சியார் திருமொழி
திருப்பாவை, நாச்சியார் திருமொழிக்கு விளக்கம் தரும் நுால். எளிய நடையில் உள்ளது. திருப்பாவையில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பாவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் நீராடச் செல்லும் சிறுமியர் ஒவ்வொரு நாளும் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. நாச்சியார் திருமொழியில் வெளிப்படும் அகப்பொருள் செய்தி, அரிய தமிழ்ச் சொற்களை காட்டும் வகையில் அமைந்துள்ளது. திருப்பாவைக்கும், திருமொழிக்கும் அற்புத உரை தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்