/ கட்டுரைகள் / திருவள்ளுவர் மலர் 2025
திருவள்ளுவர் மலர் 2025
திருக்குறளின் பொருள் சிறப்புகளை எடுத்துக்கூறும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மங்கலமலர், வாழ்த்துமலர், ஆய்வுமலர், கவிமலர், அறிவியல்மலர் உட்பட, 10 தலைப்புகளில் திருக்குறளின் சிறப்பை கூறும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. திருக்குறளில் உள்ள கருத்துகள், உலகில் பிற மொழிகளில் வெளியாகியுள்ள இலக்கியங்களுடன் ஒப்பிடப்பட்டு சிறப்புகள் எடுத்து கூறப்பட்டுள்ளன. திருவள்ளுவர் வெளிப்படுத்தும் நல்லாட்சி நெறிமுறைகள் இடம் பெற்றுள்ள குறள்கள் குறித்த கட்டுரைகள் அதிமாக உள்ளன. இதே கருத்துகளை முன்வைக்கும் கவிதை படைப்புகளும் தொகுத்து தரப்பட்டு உள்ளன. மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு வெளியீடாக மலர்ந்துள்ள நுால். – மதி




