/ தமிழ்மொழி / திருவள்ளுவர் திருவுலா
திருவள்ளுவர் திருவுலா
பழந்தமிழ் புலவர் திருவள்ளுவரை திருவுலாவுக்கு அழைப்பதாக அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். ஏழு பருவப் பெண்கள், அறிவு தரும் ஆசானாக பாவித்து வள்ளுவரை வணங்குவதாக வர்ணிக்கப் பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வையும், குறள்களையும் போற்றுகிறது. சொல், பொருள் நயத்துடன் உலா இலக்கியப்படி அமைந்தது. கலிவெண்பா யாப்புப்படி இயற்றப்பட்டுள்ளது. திருவள்ளுவமாலையில் உள்ள கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ஏழு வகை பருவ பெண்கள், வள்ளுவரின் அறிவை வியப்பது புதுமை செய்தி. குறளை பல கோணங்களில் ஆராய்ந்து, அறவுரைகளை எடுத்துரைக்கிறது. திருக்குறள் பற்றி அறிஞர்கள் கூறிய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. திருக்குறளை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்




