/ கட்டுரைகள் / திருவள்ளுவரின் உலகளாவிய சமன்மைப் பார்வைகள்

₹ 150

திருக்குறளில் இடம் பெற்றுள்ள சமன் செய்திகள் குறித்த தொகுப்பு நுால். ஆய்வு நோக்கில் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆண் பெண் சமம், பிறப்பால் வேறுபாடின்மை, ஆன்மிகம், சமுதாயம், அறநோக்கம், இல்லறம் போன்ற பொருண்மைகளில் கருத்தாளமும், குறளின் குறிப்புகளும் இணைத்து கூறப்பட்டுள்ளன. திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து, வினைத் துாய்மை போன்ற அதிகாரங்களில் அதிக அளவு சமன் கருத்துக்கள் இடற்பெற்றிருப்பதை குறிப்பிடுகிறது. ‘சமன் செய்து சீர் துாக்கும் கோல் போல்’ குறளில் நடுநிலைமை மற்றும் சமத்துவ கருத்துக்கள் மேலோங்கி இருப்பதை தெளிவுபடுத்துகிறது. வள்ளுவரின் உலகளாவிய பார்வையை எடுத்து கூறும் நுால். – ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ