/ ஆன்மிகம் / திருவாசகமும் அருணையாரும்

₹ 70

திருவாசகத்திற்கு தருமை ஆதீனப் புலவர் சி.அருணை வடிவேல் எழுதிய உரையை ஆராயும் நுால். மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தில், ‘முந்தை வினை முழுதும் ஓய’ என்று பிரித்துப் படிக்காமல், ‘முந்தை வினை முழுதும் மோய’ என்று படிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறது. மோய என்றால் நீங்க என்பது பொருள். இது மோசனம் என்னும் வடசொல்லின் திரிபு என்று விளக்குகிறது. மோனையும் பொருத்தமாக உள்ளது. திருவாசக செய்திகளை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தந்துள்ளதை பதிந்துள்ளது.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை