/ வாழ்க்கை வரலாறு / தியாகப் பாதை - பரம்வீர் சக்ரா
தியாகப் பாதை - பரம்வீர் சக்ரா
இந்திய ராணுவ வீரர்களின் வீரம், தியாகத்தை விவரிக்கும் நுால். நாட்டு அமைதிக்கு ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகமும் காரணம் என்கிறது. மூவர்ணக் கொடியையும், பாரதத்தையும் காக்க, போர்க்களத்தில் வீர, தீரம் காட்டுவதால் பெறும் உயரிய பரம்வீர் சக்ரா விருதின் சிறப்பை எடுத்துரைக்கிறது. விடுதலைக்கு முன்னும், பின்னும், இந்திய வீரர்கள் ஈடுபட்ட போர்களின் சூழல், வீரம் மிக்க சாகசங்களை விளக்குகிறது. காஷ்மீரைக் காக்க நடைபெற்ற போர், சீனப் போர், இந்தியா- – பாகிஸ்தான் போர், கார்கில் போர் குறித்தும், அவற்றில் தியாகம் செய்த வீரர்கள் பற்றியும் கூறுகிறது. நாடு தான் முதன்மையானது என தொண்டாற்றியோர் குறித்த விபரங்களை அறிய உதவும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து




