/ சிறுவர்கள் பகுதி / தியாகமனம்
தியாகமனம்
குழந்தைகள் மனதில் அன்பு, ஒற்றுமை உணர்வு, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையை விதைக்கும் படக்கதை நுால். அறிவியல் உண்மைகளையும், சமுதாய ஒழுங்கையும், மக்கள் ஒருங்கிணைந்து எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. பூகம்ப நிகழ்வை முன்கூட்டியே அறிய உதவும், ‘ஆன்டெனா’ பற்றிய தகவல் தேடலை ஏற்படுத்துகிறது. சிறுவர் – சிறுமியர் தேர்ந்தெடுக்கும் சேவை மேன்மையானது என்பதை வள்ளலார் மற்றும் அன்னை தெரசா பணிகளுடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் வந்தால், பிற மொழிகளின் அவசியம் என்ன என்பது மென்மையாக எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது. வளரும் பயிருக்கு உரம் போல் படைப்பு உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் – சிறுமியர் அவசியம் படிக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்




