/ புத்தக மதிப்புரை / தியாகிகளின் வரலாற்றுக் கதைகள்

₹ 170

புகழ்பெற்ற தலைவர்கள் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நுால். காந்திஜி, தென் ஆப்பிரிக்கவில் டர்பன் அணிந்து வலம் வந்து புரட்சி செய்தது சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், வழக்கறிஞர் பணியில் கடைப்பிடித்த சத்தியத்தை கடைசி வரை காப்பாற்றியதை குறிப்பிடுகிறது. ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின் பிடிவாதம், படிப்பில் முழு ஆர்வம் காட்டிய மார்ட்டின் லுாதர் பண்புகள் போன்ற செய்திகளுடன் உள்ளது. காமராஜர், கரிபால்டி, அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் கூறுகிறது. வாழ்வில் நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ