/ கட்டுரைகள் / தொல்காப்பியப் பூங்கா

₹ 400

எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றின் இலக்கணத்தையும் எளிமையாக தந்துள்ள நுால். எழுத்ததிகாரத்தில் 10, சொல்லதிகாரத்தில் ஏழு, பொருளதிகாரத்தில் 83 என, 100 கட்டுரைகள் சொல்லோவியமாக தீட்டப்பட்டுள்ளன. பொருள் இலக்கணம் சொல்வதற்காகத்தான், சொல் இலக்கணத்தையும், எழுத்திலக்கணத்தையும் தொல்காப்பியர் சொன்னதாக குறிப்பிடுகிறது. எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் முறையே பலாக்கனியில் மேலுள்ள முள், சடை, சுளை என்ற உவமைகளாக தந்து, சூத்திரங்களின் கருத்து விளக்கப்பட்டுள்ளது. கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல என்பதற்கு அறிவியல் முறையில் விளக்கும் பாங்கு நயமாக உள்ளது. அகம், புறம் என்ற மலர்களை பூங்காவில் மலரவிட்டு இலக்கிய நறுமணம் தரும் நுால். – பின்னலுார் விவேகன்


சமீபத்திய செய்தி