/ வாழ்க்கை வரலாறு / தாமஸ் ஆல்வா எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன்
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையை சித்தரிக்கும் படக்கதை நுால். பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பின்னணியுடன் தரப்பட்டுள்ளது.எளிய படங்கள், கதையை புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன. படங்களுக்கு வழங்கப்பட்ட உரையாடல்களும், தரப்பட்டுள்ள தகவல்களும் வாழ்வின் சூழல்களை பதிவு செய்துள்ளன. அனைவருக்கும் புரியும் எளிய மொழிநடையில் உள்ளது.எடிசன் பிறப்பில் துவங்கி, ஒவ்வொரு நிகழ்வும் பதிவாகியுள்ளது. சிறுவர், சிறுமியர் புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படக் கட்டங்களும் நிகழ்வுகளை துல்லியமாக காட்டுகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியும் தரப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதனை புரிந்தவர் வாழ்க்கையை கூறும் படக்கதை நுால்.– ஒளி