/ கவிதைகள் / தொட்டனைத்துாறும் மணற்கேணி
தொட்டனைத்துாறும் மணற்கேணி
மனித மனம், அறிவு சார்ந்த கற்பனையுடன் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். நிற்கும் இடத்தில் குதிரையின் வலி நிறைந்த குரலை, ‘வீதியில் நிற்கும் குதிரை’ கவிதை அழுத்தமாக சொல்கிறது. உண்மை காதல் உலகத்திற்கு தெரியாது; தெரிந்ததெல்லாம் பாதி காதல் தான் என, ‘பாதி காதல்’ விளக்குகிறது. சமூக ஊடகங்களில் வரும் செய்தி, தகவல்களை எப்படி எடுத்து ஆராய வேண்டும் என ‘அலைபேசி மனிதன்’ கவிதை கற்றுத்தருகிறது. வானில் பறக்கும் பட்டமும், பறவையும் உரையாடும் கவிதை ரசிக்க வைக்கிறது. காடு வளர்த்து, பூமியின் ஆயுளை அதிகரிக்கிறது யானை. அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதை, ‘பிளிறும் களிறு’ உருக்கமாக பகிர்கிறது. மனதை கவரும் கவிதை நுால். – டி.எஸ்.ராயன்




