/ வாழ்க்கை வரலாறு / தோழர் நல்லகண்ணு
தோழர் நல்லகண்ணு
நலமுடன் நுாறாண்டை நெருங்கி வாழும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை போற்றும் வகையிலான நுால். எளிமை, நேர்மை, தன்னலமற்ற அரசியல் என்பதற்கு சான்றாக இருப்பது பற்றி எடுத்துரைக்கிறது. பொதுமக்கள் நலனில் காட்டிய அக்கறை, போராட்டத் தீவிரம் குறித்தும், 14 அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போல் சிதறிக் கிடந்த விவசாயிகளை அணி திரட்டி சங்கப் பணி ஆற்றிய விபரம் தரப்பட்டுள்ளது. கொடிய அடக்குமுறை, சமூக கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலமற்ற கூலி தொழிலாளர்களை அணி திரட்ட பட்ட பாடுகள் குறித்தும் உள்ளது. கொள்கைப் பிடிப்பு மாமனிதராய் காட்டுகிறது. எளிமையாக வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ்வதை குறிப்பிடும் நுால். – ஊஞ்சல் பிரபு