/ வர்த்தகம் / தொழில் செ(ய்)ய விரும்பு

₹ 190

சுயதொழிலில் வெற்றி பெறுவதற்கு வழி வகைகளையும், நடைமுறைகளையும் அனுபவ பாடங்கள் வழியாக எடுத்துரைக்கும் நுால். புதிதாக தொழில் துவங்குவோர், தடைகளையும் தடங்கல்களையும் பாடமாக கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அதை ஊன்றி கவனித்தால் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கும். அது போன்ற அனுபவ பாடங்களை எளிய நடையில் வெளிப்படுத்துகிறது இந்த புத்தகம். வாடிக்கையாளரை ஈர்த்து, தக்கவைத்துக் கொள்வது, நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களை சுணக்கமின்றி தீர்த்து வைப்பது என, முன்னேற்ற பின்னணியை அனுபவக் கதைகள் வாயிலாக எடுத்துரைக்கிறது. தொழில் வாய்ப்புகளை நெறி தவறாது தக்க வைப்பது பற்றியும் உரைக்கிறது. புதிதாக தொழில் துவங்குவோர் வெற்றிப் படிகளில் ஏறுவதற்கு உதவும் நுால். – ஒளி


சமீபத்திய செய்தி