/ பயண கட்டுரை / துடிப்பான துபாயைப் பற்றிய அரிய செய்திகள்!
துடிப்பான துபாயைப் பற்றிய அரிய செய்திகள்!
துபாய் நாட்டின் சட்ட திட்டங்கள், வளர்ச்சிக்கான காரணங்கள் பற்றிய தகவல்களை முன்வைக்கும் நுால். சின்னஞ்சிறு நாடாக இருந்தாலும் உலகப் புகழ் பெற என்னென்ன காரணங்கள் என்று அருமையாக சொல்லப்பட்டுள்ளது. மணலில் பூத்த மாநகரில் ரயில் நிலைய நுழை வாயில்களில் பயணச்சீட்டை காட்டினால் தான் கதவு திறக்கிறது. இது இந்தியாவில் வந்தால் சீர்கேடு வராது என பதிவாகியுள்ளது. சாலை ஓரங்களில் நின்று மக்கள் பேசுவதை பார்க்கலாம்; ஆனால் எச்சில் துப்புவதை பார்க்க முடியாது என்கிறது. அந்த நாடு சுத்தம், சுகாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியத்தருகிறது. ஒட்டகங்களுக்கு மாரத்தான் போட்டி போன்ற தகவல்களை தரும் நுால். – சீத்தலைச்சாத்தன்




