/ வரலாறு / பிரஞ்சிந்திய வரலாற்றுத் தடயங்கள்
பிரஞ்சிந்திய வரலாற்றுத் தடயங்கள்
புதுச்சேரி பகுதியின் வரலாற்று தடயங்களை பதிவு செய்துள்ள நுால்.சிறிய மாநிலமான புதுச்சேரி, பிரான்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின் போதிலான தடயங்கள் வரலாற்று சுவடுகளாக உள்ளன. அந்த சுவடுகளை தேடி தொடர்ந்து அலைந்து, தகவல்களை திரட்டி சரிபார்த்து தொகுக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அடிப்படையில் வரைபடங்கள் உதவியுடன் எழுதப்பட்டுள்ளது. எளிய தலைப்புகளில் தகவல்கள் உள்ளதால் வாசிக்க ஏதுவாகிறது. புதுச்சேரி வரலாற்றை சுவாரசியம் குன்றாமல் பதிவு செய்துள்ள நுால்.– மதி