/ கதைகள் / ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

₹ 120

படிப்பினை தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கற்பனை திறமும், எளிய நடையும் வாசிப்போருக்கு உற்சாகம் தருகிறது. எதையும் தனக்கென்று நினைப்பது ஏன் என்ற கேள்வியை கேட்கிறது. போதையே கதி என பொறுப்பற்று வாழும் மகனால், தந்தை அடையும் துயரத்தை கண் முன் நிறுத்துகிறது, ‘சைக்கிள் ரிக்‌ஷா’ கதை. எத்தனை இடங்களில் இது போல் நடக்கிறது என்பது இதயத்தை நெருட வைக்கும் கேள்வியாக உள்ளது. பொறுப்பு மிக்க இளம் பெண்ணின் காதல் பற்றி வேகம், விவேகத்துடன் கலவையாய் சிலிர்க்க வைக்கிறது. நற்குணம் உடையோர் முன், கருப்பாவது சிவப்பாவது என்ற எண்ணத்தை விதைத்து விருட்சமாய் வளர்க்கிறது. ஆர்வத்தை துாண்டும் நயமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்