/ கதைகள் / உதய காலம்
உதய காலம்
அரசியல் கட்சித் தலைவர் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட வாலிபரை சுற்றி சுழலும் நாவல் நுால். பெற்றோர், காதலி பேச்சை மீறி அரசியலில் நுழைகிறார் வாலிபர். அவரது செயல்கள் பிடித்துப் போக, அமைச்சர் பதவி வழங்குகிறார் தலைவர். பின், வாலிபரின் வாழ்க்கையில் பிரச்னை துவங்குகிறது. சினிமா நடிகையுடன் பழகுகிறார். அந்த நடிகை கொலைக்கு வாலிபர் தான் காரணம் என பழி விழுகிறது. கட்சி தலைமை குற்றமற்றவர் என நிரூபிக்க கால அவகாசம் வழங்குகிறது. இறுதியில் அடியாள் ஒருவனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய போது சில தகவல்களை கூறுகிறான். ஆனாலும், நடிகையை கொன்றவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு தகவல் மட்டும் வழிகாட்டுகிறது. கொலை செய்து மந்திரியை சிக்க வைத்த மர்மத்தை சுவாரசியமாக சித்தரிக்கும் நாவல் நுால்.– முகில்குமரன்