/ புத்தக மதிப்புரை / உலகப் பொதுமறைக்கு ஓர் உரை

₹ 300

திருக்குறள் பாக்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் உரை தரும் நுால். திருக்குறள் வரிசைப்படி ஒவ்வொரு பாக்களையும் முதலில் தந்து, உரிய தமிழ் உரை எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட குறளுக்கு உரை விளக்கம் தரப்பட்டுள்ளது. எளிய நடையில் அமைந்திருப்பதால் படித்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. உரைகள் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று சொற்றொடர்களில் அமைந்துள்ளன. புத்தகத்தின் இறுதியில், அதிகார அகர வரிசை, செய்யுள் முதற்குறிப்பு அகராதி குறள் எண்களுடன் அகர வரிசைப்படி தொகுத்து தரப்பட்டுள்ளன. திருக்குறள் பாக்களுக்கு இரண்டு மொழிகளில் உரை விளக்கம் தரும் எளிய நடையில் அமைந்துள்ள நுால். – மதி


புதிய வீடியோ