/ சுய முன்னேற்றம் / உங்களை வென்றால் உலகினை வெல்லலாம்!
உங்களை வென்றால் உலகினை வெல்லலாம்!
எண்ணங்களும் உணர்வுகளும் நல்லிணக்கம் என்று ஐந்து பகுதிகளாக பிரித்து ஆழ்மனதை எப்படி நாம் அடிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வு செய்துள்ள நுால். உடல் மற்றும் மனதை புரிந்து கொண்டால் தான், அகம் மற்றும் புற வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்கிறார். காதலை புரிய தெரியாதவர்களால், தியானம் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுகிறார். வாழ்வில் வருவதை அவ்வாறே ஏற்கத் தயாராக இருந்தால் நிம்மதி கிடைக்கும் என்பதும் விவாதத்திற்குரிய கருத்து. உடலையும் மனதையும் பற்றி அறியச் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.– சீத்தலைச் சாத்தன்