/ கதைகள் / உண்மையான மனசு!
உண்மையான மனசு!
சுவாரசியமான சம்பவங்களை 95 தலைப்புகளில் கதையாக தந்து, சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ள நுால். முதுகு வலியுடன் அவதிப்பட்ட மாமியார் நிலைமையும், அவர் கோவிலுக்கு சென்று வந்த பின் நடந்த சம்பவமும் குறித்த, ‘எல்லாம் அவன் செயல்’ கதை ரசிக்கும் விதமாக உள்ளது. ‘நல்லதுக்கு காலமில்லை’ கதையில், வாலிபர் ஒருவருடன் சுற்றும் பெண்ணை நல்வழிப்படுத்தும் விதமாக கூறுகிறார் ஒரு பெண். ஆனால், அதில் கேட்ட பதில் அதிர்ச்சி தருவதாக ஆகிவிடுகிறது.வீடு பார்க்க அலையும் படலத்தை, ‘சம்மதம்’ கதை பேசுகிறது. மாமியார் காலில் குத்தியிருந்த முள்ளை எடுக்க முயற்சித்த மருமகளை, பக்கத்து வீட்டார் சண்டை நடப்பதாக நினைக்கும், ‘அணுகுண்டு’ கதை நகைச்சுவை. யோசிக்க வைக்கும் சிறுகதை நுால்.– முகில் குமரன்