/ புத்தக மதிப்புரை / உன்னில் விழுந்து என்னில் எழுந்தேன்
உன்னில் விழுந்து என்னில் எழுந்தேன்
விலை ரூ.150. கஸல் எனும் அற்புதம் எப்போதும் நிகழ்வதல்ல; அது எங்கேனும் எப்போதேனும் ஓர் அதிசயம் போல மலர்வது என்கின்றனர் கஸல் கவிஞர்கள். அந்த வரிசையில் கஸல் தொகுப்பாய் தனது நான்காவது நுாலைப் படைத்துள்ளார் கலையரசி. தேடித் தேடி வார்த்தைகளை சேகரித்து அதை சின்னஞ்சிறு நுாலில் வரிகளாக்கி அவர் எழுதிய கவிதைகள், வாசகர்களின் மனதை வசப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒன்றிரண்டு அடிகளில் சட்டென்று முடிந்து விடும் கவிதை. ஆனால் அதை பலமுறை மனதுக்குள் உருப்போடும் போது தான் சொற்ப வார்த்தைகளின் சிற்ப பிரமாண்டம் புரியும். இது ஒரு மாய உலகு. ஒரே கவிதையை மீண்டும் மீண்டும் படித்து அதன் ஆழத்திற்குள் புதைந்து செல்வதும் ஒரு அதிசயம் தான். அதிசயத்தை ஆச்சரியத்தை உணர வேண்டுமா... ‘உன்னில் விழுந்து என்னில் எழுந்தேன்’ கவிதைத் தொகுப்பை படிக்கலாம். – எம்.எம்.ஜெ.,




