/ கதைகள் / உப்பிட்டவருக்கு துரோகம் செய்யலாமா?

₹ 160

வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாக்கி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். குறுகிய மனப்பான்மை, குள்ளநரித்தனம் உடையோர், அன்பு உள்ளத்தோடு உதவியவருக்கு துரோகம் இழைக்கும் போது, இயற்கை தந்த தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளது. வீட்டை நம்பி விட்டுச் செல்பவரிடம், வேலை தேடி வருவோர், எப்படி நடப்பர் என்பதை ‘ஆள் தேர்வு’ கதையில் நயம்பட உரைக்கிறது. இப்படிக்கூட நடக்குமா என அச்சம் கொள்ள வைக்கிறது ‘மனித வியாபாரம்’ கதை. சோம்பேறியை எப்படி திருத்தினர் பெற்றோர் என்பதை சுவைபட உரைக்கிறது, ‘நாடகம்’ கதை. இளைஞர்கள் பயணிக்கும் திசையை, ‘ஒண்ணு பிளஸ் நாலு’ கதை எடுத்துரைக்கிறது. கருத்துடன் படிக்க ஏற்ற சிறுகதை நுால். – டாக்டர் கார்முகிலோன்