/ கவிதைகள் / ஊரடங்கில் ஓர் உதயம்
ஊரடங்கில் ஓர் உதயம்
கொரோனா காலத்தை பாடுபொருளாக கொண்டு இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பணி, வருவாய் இழந்து தவித்து உறவு, நட்புகளை இழந்த அவலத்தை குறிப்பிடுகிறது. பின் உழைப்பை முதலீடாகக் கொண்டு புதிய வழிகளை கண்டறிந்து வெற்றி பெற்றதையும் கூறுகிறது. காப்பிய நெறி வழுவாது மரபுக் கவிதையால் இயற்றப்பட்டுள்ளது. தலைவன், தலைவி மாண்பு மற்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருள்களை உணர்த்தி காப்பிய பண்புகள் நிறைந்தது. சொற்கட்டும் சந்தங்களும் சுவை குன்றாமல் எதுகை, மோனைகளுடன் சீர்மிகுந்துள்ளன.இல்லறத்து சிக்கல்களை சித்தரிப்பதோடு தீர்வுகளும் பொதிந்து கிடக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்