/ புத்தக மதிப்புரை / உயர்ந்திட உன்னை நம்பு!
உயர்ந்திட உன்னை நம்பு!
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நிறைய மேற்கோள்களுடன் படைக்கப்பட்டு உள்ளது. இலக்கை அடைவதற்கு, இடைவிடாது செயல்படுவது ஒன்று தான் சரியான வழி என்பதை கூறுகிறது. மூங்கில் வலியை பொறுத்துக் கொள்வதால் தான், புல்லாங்குழல் ஆகிறது என உதாரணம் காட்டுகிறது. நிம்மதியுடன் வாழ மாற்ற முடியாததை, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரைக்கிறது. நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது என எடுத்துரைக்கிறது. நேர மேலாண்மையே வெற்றிப் பாதைக்கு இட்டு செல்லும் படிக்கட்டு என்பதை நயம்பட உரைக்கிறது. அடுக்கடுக்காக காட்டும் உதாரணங்கள், புதுப் பாதைக்கு வழிகாட்டும் ஒளி விளக்காய் உள்ளது. வாழ்வதற்கு புத்துணர்ச்சி ஊட்டும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




