/ விளையாட்டு / உலக விளையாட்டு வரலாறு
உலக விளையாட்டு வரலாறு
பக்கம்: 191 விளையாட்டைப் பற்றி பொது அறிவுப்பூர்வமாக அறிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு, நல்ல விருந்தாக வந்துள்ளது, உலக விளையாட்டு வரலாறு புத்தகம். முழுக்க, முழுக்க கேள்வி பதில்களாகவே சொல்லி இருந்தது, தனி கவனத்தை கவர்கிறது. ஒலிம்பிக் வரலாற்றிலிருந்து, இந்தியாவின் முக்கிய உள்நாட்டு போட்டிகள் வரை, அனைத்தையும் தரம் பிரித்து, வகை பிரித்து எடுத்துக் காட்டி இருக்கிறார் நூலாசிரியர். பல்வேறு உலக விளையாட்டுப் போட்டிகளில், வர்ணனையாளராகவும், ஒலிபரப்பு பொறுப்பாளராகவும் நூலாசிரியர் பணியாற்றியவர் . 40 விளையாட்டுக்களையும், 505 வீரர்களையும், 116 வருட வரலாறு யாவற்றையும், ஆயிரம் கேள்வி பதில்களாக அடுக்கி இருப்பது, அவரின் பேருழைப்பை வெளிப்படுத்துகிறது.