/ ஆன்மிகம் / வள்ளலார் கண்ட தருமச்சாலை
வள்ளலார் கண்ட தருமச்சாலை
வள்ளலார் வலியுறுத்திய சமரச சன்மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வு, உயிரிரக்கம் உள்ளிட்ட கருத்துகளை விளக்கும் நுால். புத்தகம் ஐந்து அத்தியாயங்களாக பகுக்கப்பட்டுள்ளது. மண்ணுலகில் மக்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க இறைவனால் வருவிக்க பெற்றவர் வள்ளலார் என்கிறது. ஜீவகாருண்ய ஒழுக்கம், சாகாக்கல்வி, சன்மார்க்கத்துக்கு விளக்கம் தருகிறது. மரணமிலா பெருவாழ்வின் மேன்மை பற்றி அழுத்தமான கருத்தை பதிவு செய்கிறது. பசியால் வாடிக்கொண்டிருக்க, மதம் என்ற மாய உலகால் கட்டுப்படுத்திய சமூகச்சூழலை துல்லியமாக படம்பிடித்து காட்டுகிறது. வள்ளலாரின் அரும்பெரும் கருத்துகள் மற்றும் பெருமைகளை அறிந்து கொள்ள உதவும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




