வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை-17. (பக்கம்: 392) சிலம்பு செல்வரின் புகழ்பெற்ற நூல். ஏற்கனவே பல பதிப்புகளை கண்டது. வள்ளலார் இறையருள் பெற்ற ஞானி மட்டுமல்ல, சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதலை விரும்பியவர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையின் அடிப்படையில் அவர் பாடிய சீர்திருத்தப்பாடல்கள் மக்களிடையே பரப்பப்படவில்லை. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தியவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். பசிப்பிணியை போக்க பல அறச்சாலைகள் நிறுவியவர். வள்ளலாரின் பிறப்பிலிருந்து அவர் ஜோதியில் கலந்தது வரையிலான அவரது தவ வாழ்க்கை, அவரது கருத்துக்கள், அவர் உருவாக்கிய மனிதநேயம் மிக்க அமைப்புகள் ஆகியவை பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர். "இவ்வளவு சிறந்த ஆராய்ச்சி நூலை எழுத இவருக்கு எப்படி அவகாசம் கிடைத்தது எண்ணி வியப்புற்றேன் என்று அண்ணாதுரை வியந்து பாராட்டிய நூல். அனைவருமே படித்து இன்புற வேண்டிய நூல்.