/ வாழ்க்கை வரலாறு / வல்லவர்கள் நல்லவர்கள்

₹ 260

ஆத்திகராக வாழ்ந்த நடிகர் நம்பியார், நாத்திகராக இருந்த நடிகர் எம்.ஆர்.ராதா வாழ்க்கை நிகழ்வுகளை கூறும் நுால். தமிழ் சினிமாவில் வில்லனாக கோலோச்சியவர் நம்பியார். தன் 13ம் வயதில் நாடக குழுவில் சேர்ந்து, 71 ஆண்டுகள் சினிமாவில் நடித்துள்ளதை தெரிவிக்கிறது. சைவ உணவு பிரியராக 60 ஆண்டுகள் சபரிமலை சென்றது, உடற்பயிற்சியில் கவனம், புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததை சொல்கிறது. நடிகர் எம்.ஆர்.ராதா 7 வயதில் நாடக குழுவில் சேர்ந்து, சமூக சீர்திருத்த நாடகங்கள் நடத்தியதை குறிப்பிடுகிறது. இவரது பேச்சாற்றல், நடிப்புத்திறன் சினிமாவில் பிற நடிகர்களை பயப்பட வைத்ததை சொல்கிறது. இருவரும் சினிமாவில் சாதித்ததை விவரிக்கும் நுால். – டி.எஸ்.ராயன்