/ வரலாறு / வள்ளியூர் வரலாறு

₹ 400

பக்கம்: 503 அள்ளியூர் என்பது பள்ளியூராகி, இன்று வள்ளியூர் என்று வழங்கப்படும் ஊரை, தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் காணலாம். முருகனை மணந்த வள்ளியின் விரிவான வரலாற்றை, இந்நூல்வாசிக்கிறது.இது குலசேகர பாண்டியனின் இறுதிக் கோட்டை நகரம். இங்கு நடந்த கன்னடப் போர் மிக முக்கியமானது. அகத்தியர்,அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தமிழால் போற்றப்பட்ட ஊர்.புராணம், வரலாறு, கல்வெட்டு, இலக்கியம், வாய்மொழி வழக்காறுகளை வைத்து "வள்ளியூர் மிக விரிவாக இந்நூலில் வரலாறாக வரையப்பட்டு உள்ளது.கல்வெட்டுச் செய்திகளில், "உலகமுழுதுடையார் என்ற சாந்திக்கூத்தி, வள்ளியூரில் அம்மன் கோவிலைக் கட்டியது படிப்போரை வியக்க வைக்கிறது.சமணம் மற்றும் அறுசமய ஆலயங்கள் பற்றி விளக்கமும், நாட்டுப்புற கதைப் பாடல்கள் தெரிவிக்கும் செய்திகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.வள்ளியூர் மண்ணின் மணம் வீசும் கதைகளும், பாடல்களும், வரலாறு மறுஆவணம் செய்யப்பட்டு உள்ள நூலிது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை