/ கதைகள் / வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!

₹ 60

பாசத்தை பறைசாற்றும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெகிழ வைக்கும் வண்ணம் இலங்கை தமிழர் வழக்கில் மலர்ந்துள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை படம் பிடித்து காட்டுகிறது முதல் கதை. பரிவிற்கும், பாசத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. பணக்கார மமதையால் பிறரை பரிகசிப்பதிலே மகிழ்வு காணும் பெண்ணை, கடவுள் எப்படி கர்வ பங்கம் செய்தார் என எடுத்துரைக்கிறது இன்னொரு கதை. மனைவியை கிள்ளுக்கீரையாக எண்ணிய கணவனுக்கு பாடம் புகட்டியதை விவரிக்கிறது மற்றொரு கதை. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது எத்தனை உண்மை என விளங்க வைக்கிறது. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிச்சாரமாக உள்ள கதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்