/ ஆன்மிகம் / வழி நெடுக கல் சிலைகள்...!

₹ 120

கிராமப்புறத்தில் உள்ள பழங்கால கோவில்கள் பற்றி வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து தகவல்களை வழங்கும் நுால். கள ஆய்வில் தகவல் திரட்டி எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது. சிதைந்து போன கட்டுமானங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளது. கிராமங்களில் வரலாற்று ஆதாரங்களாக நிற்கும் கோவில்களில் பல சிதைந்து அழிந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. அவற்றின் தடயங்களை ஆய்வு செய்து கிடைத்த தகவல்களை திரட்டி, தமிழக வரலாற்றை விரிவாக்கும் முயற்சியை முன் வைக்கிறது. செங்கல்பட்டு கிராமப்புறங்களில் சிதைந்த வரலாற்று சின்னங்களை மீளாய்வு செய்துள்ளது. வரலாற்றுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் தகவல்கள் உள்ளன. வரலாற்று ஆய்வு தகவல்களை உடைய நுால்.– ஒளி


புதிய வீடியோ