/ கட்டுரைகள் / வாழ்வில் திருமணம் மிக அவசியம் என்பது ஏன்?
வாழ்வில் திருமணம் மிக அவசியம் என்பது ஏன்?
இளைஞர்கள் திருமணத்திற்கு முன் சந்திக்கும் பிரச்னை, அதை தீர்க்கும் வழிமுறைகளை உடைய நுால். கவர்ந்து இழுக்கும் தலைப்புகளில் தகவல்களை தொகுத்து தருகிறது.இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது ஏன்... பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் முடிக்க ஆசைப்பட உரிய காரணங்களை சொல்கிறது.மணத்தில் இருதரப்பு எங்கு சந்திப்பது, தயக்கம் இருந்தால் எப்படி போக்குவது, திருமணம் செய்ய முடிவெடுத்த பின், எப்படி அதை நோக்கி செல்வது போன்ற அடிப்படை தகவல்களை உடையது. சில உண்மை சம்பவங்களும் இணைத்து காட்டப்பட்டுள்ளன. திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால்.– வி.விஷ்வா