Advertisement

நலமாக வாழ அழகான யோகா

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலுக்கு மருந்து, நல்ல உழைப்பும், யோகாவும், முத்திரையும் ஆகும். உள்ளத்திற்கான மருந்து நல்ல நினைப்பும், தியானமும் ஆகும் என்று கூறும் ஆசிரியர், யோகாசனங்கள், கைவிரல் முத்திரைகள், தியானம் பற்றி விளக்கியுள்ளார். 34 ஆண்டு அனுபவங்களை பாடமாகச் சொல்லி வகுப்பு எடுக்கிறார். பதஞ்சலி யோக சூத்திரம், அஷ்டாங்க யோகா பற்றி விளக்குகிறார்.சின் முத்திரையில் துவங்கி மகாசிரசு முத்திரை வரை, படத்துடன் விளக்குகிறார். 14 வகை ஆசனங்களை விளக்குகிறார். நாடிசுத்தி, சீத்தளி, வயிறு, மார்பு, தோள்பட்டை முறை மூச்சுப் பயிற்சிகள், சக்கரா தியானம், நாற்காலி தியானத்தை படத்துடன் விளக்கியுள்ளார். குருகுலத்தில் கற்பிப்பது போல் எழுதியுள்ளார்.கண் வலி போன்ற, 13 வகை நோய்கள் தீர, ஆசனங்களைப் பட்டியலில் தந்துள்ளார். உடலையும், மனதையும் நலமாக்கும் விளக்க நுால்.– முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்