/ கதைகள் / வீரத் தளபதி குயிலி
வீரத் தளபதி குயிலி
விடுதலை போராட்ட வரலாற்றில் குயிலி யின் கதையை மையமாக உடைய நுால். வேலு நாச்சியார் சேவகரான குயிலி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக உயிர் நீத்த தியாகி. அவரது வரலாற்று உண்மைகளை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிவகங்கையில் நடந்தவை விளக்கப்பட்டுள்ளன. குயிலியின் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்றின் மறைந்த அத்தியாயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடக வடிவில் உள்ளதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப பாடல்கள், வசனங்கள் இடம் பெற்றுள்ளன. நடை, நடிப்பு, வரலாற்று பின்னணியுடன் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. வரலாற்றில் ஆர்வம் உள்ளோருக்கு உதவும். – இளங்கோவன்